1234 — வடகிழக்கு சீனாவில் ஜின் அரசு ஓஜெடெய் கான் தலைமையிலான மங்கோலியப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டது.
1238 — சுகோத்தாய் என்ற தாய் பேரரசு அமைக்கப்பட்டது.
1258 — முஸ்லிம்களின் அபாசிட் அரசின் நகரான பக்தாத் மங்கோலியத் தளபதியான ஹுலாகு கான் என்பவனால் எரித்து அழிக்கப்பட்டது. கடைசி அபாசிட் அரசன் அல்-முஸ்டாசிம் என்பவன் கொல்லப்பட்டான்.
1259 — தென்மேற்கு சீனாவில் இடம்பெற்ற சமரில் மங்கோலிய அரசன் மோங்கே கான் என்பவன் கொல்லப்பட்டான்.
1260 — எகிப்தில் இடம்பெற்ற சமரில் மங்கோலியர்கள் தோற்றனர்.