|
Article on other languages:
|
மலர் (அல்லது பூ), மலரும் தாவரங்களில் காணப்படும் இனப்பெருக்க அமைப்பு ஆகும். மலர்கள், தாவரங்களின் இனப்பெருக்க உறுப்புகளை கொண்டுள்ளன. மலர்களின் பணி விதைகளை உருவாக்குவது ஆகும். உயர்நிலைத் தாவரங்களுக்கு விதைகளே அடுத்த தலைமுறையை உருவாக்குகின்றன. தாவரங்களின் மலர்கள் இனப்பெருக்க அமைப்பாக இருப்பதுடன் அவற்றின் மணம், அழகு ஆகியவற்றுக்காக பன்னெடுங்காலமாக மனிதர்களால் விரும்பி வளர்க்கப்பட்டு வருகின்றன. சில மலர்கள் உணவாகவும் பயன்படுவது உண்டு. பூக்களின் பட்டியல்
பல்வேறு வண்ணம், வடிவங்களில் மலர்கள்
|
This article is from Wikipedia. All text is available under the terms of the GNU Free Documentation License.