அமினோ அமிலம்

Article on other languages:

del.icio.us del.icio.us
Digg Digg
Furl Furl
Reddit Reddit
Rojo Rojo
Add to OnlyWire
பீனைலலனைன் என்பது ஒரு பொது அமினோ அமிலம் ஆகும்.

வேதியியலில், ஒரு அமினோ அமிலம் என்பது, அமைன், காபொக்சைல் ஆகிய இரண்டு செயற்பாட்டுக் கூட்டங்களையும் கொண்ட ஒரு மூலக்கூறு ஆகும். உயிர்வேதியியலில், இச் சொல் H2NCHRCOOH என்னும் பொது வாய்பாட்டைக் கொண்ட ஒரு அல்பா-அமினோ அமிலத்தைக் குறிக்கும். இங்கே R ஒரு கரிமவேதிக் (organic) கூறு ஆகும். அல்பா-அமினோ அமிலங்களில் அமினோ, காபொக்சைலேட்டு ஆகிய கூட்டங்கள் அல்பா-காபன் (α–carbon) எனப்படும் ஒரே கரிம அணுவுக்கு இணைக்கப்பட்டுள்ளன. எந்தப் பக்கச் சங்கிலி (R-கூட்டம்) அவற்றின் அல்பா-காபனுக்கு இணைக்கப்பட்டுள்ளது என்பதைப் பொறுத்துப் பல்வேறு அமினோ அமிலங்கள் தங்களுக்குள் வேறுபடுகின்றன. இது, கிளைசைனில் இருப்பது போல் ஒரு ஐதரசன் அணுவிலிருந்து, அலனைனில் உள்ள மெத்தைல் கூட்டம் ஊடாக, டிரைப்ட்டோபானில் காணப்படும் ஹெட்ரோசைக்கிளிக் கூட்டம் வரை பல்வேறு அளவுகளில் உள்ளது.


எல்லா உயிரினங்களிலும் காணப்படும் அமினோ அமிலங்களுக்குப் புறம்பாகப் பல இயற்கையல்லாத பல அமினோ அமிலங்களும், தொழில்நுட்பம், தொழில்துறை ஆகியவற்றில் முக்கியமான பங்கு வகிக்கின்றன.

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8B_%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது

This article is from Wikipedia. All text is available under the terms of the GNU Free Documentation License.